துபாயில் நாளை தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சியில் இந்தியாவின் போர் விமானங்கள் சாரங், சூரியகிரண், தேஜாஸ் , மற்றும் துருவ் ஹெலிகாப்டர்கள் போன்றவை பங்கேற்கின்றன.
இந்நிகழ்வில் வான் சாகசங்கள், போர் உத்திகளை இந்திய விமானப் படை கண்கவரும் வான் சாகசமாக அரங்கேற்ற உள்ளது. சவுதி ஹாக்ஸ், ரஷ்யன் நைட்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் புர்சன் உள்பட பல்வேறு நாடுகளின் விமானப்படைகளின் சாகஸங்களும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளன.