ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் டிசம்பர் 6 ஆம் தேதி டெல்லி வருகிறார். இந்தியா-ரஷ்யா இடையிலான வருடாந்திர பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ள அவர் பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்துவார்.
சீனாவின் ஆதிக்கம், தாலிபன் பிடியில் உள்ள ஆப்கான் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து அவர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பாதுகாப்பு, அறிவியல், வர்த்தகம், முதலீடு தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களும் மோடி-புதின் சந்திப்புக்கு இடையில் கையெழுத்தாக உள்ளது.
கடந்த 2018 ஆம் தேதி அவர் இந்தியா வந்திருந்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது.