நான்காவது ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் “வேலா” இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஸ்கார்ப்பியன் வகையைச் சேர்ந்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவது ப்ராஜக்ட்-75 திட்டத்தில் அடங்கும். இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், பிரான்ஸ் நாட்டின், நேவல் குரூப் ஒத்துழைப்புடன், மும்பை மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
“வேலா” என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல், 6, மே 2019 அன்று தனது சேவையைத் தொடங்கி, அனைத்துக் கடல்வழி ஒத்திகைகளையும் நிறைவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டிருப்பது