சென்னை ஓட்டேரியில் மழைநீர் தேங்கியிருந்த சாலை பள்ளத்தை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு கால் ஊன்ற முயன்று கீழே விழுந்த இளம் தம்பதி, பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் மயிரிழையில் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
29 சி என்ற வழிதடம் கொண்ட மாநகர பேருந்து அடையாறில் இருந்து பெரம்பூர் நோக்கி பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. ஓட்டேரி அருகே, இருசக்கர வாகனத்தில் மனைவியை அமரவைத்து மெதுவாக நகர்ந்து வந்த நபர் ஒருவர், பேருந்து அவர்களை கடக்கும்போது, சாலையோரத்தில் மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தை கவனிக்காமல் காலை ஊன்ற முயன்றார்.
அப்போது நிலை தடுமாறி விழுந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக பேருந்து சக்கரத்தில் சிக்காமல் பக்கவாட்டில் உரசியவாறு கீழே விழுந்ததால் உயிர் தப்பினர்.