தங்களது ZyCoV-D தடுப்பூசியை, டோசுக்கு 265 ரூபாய் என்ற விலையில் ஒரு கோடி டோசுகளுக்கு மத்திய அரசு ஆர்டர் அளித்துள்ளதாக ஸைடஸ் கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 டோஸ்கள் உள்ள இந்த தடுப்பூசியை பெரியவர்களுக்கும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அவசரகால பயன்பாட்டுக்கு போடலாம் என தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.
வழக்கமாக பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளுக்குப் பதிலாக பார்மாஜெட் ((PharmaJet)) என்ற சிறு கருவி வாயிலாக இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் விலை டோசுக்கு 93 ரூபாயாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. ZyCoV-D தடுப்பூசி இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்தில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.