ஏர் இந்தியாவை வாங்கி உள்ள டாடா குழுமம், அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி முதல் அதை தனது கட்டுப்பாட்டில் இயக்கத் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் டாடா குழுமத்திற்கு வழங்குவதற்கான ஒப்புதல் கடிதமும் கடந்த மாதம் 11 ஆம் தேதி மத்திய அரசால் வழங்கப்பட்டது. டாடாவின் கட்டுப்பாட்டில் சென்ற பிறகு ஏர் இந்தியா மெகா ஏர்லைன்சாக தொடருமா அல்லது லோ காஸ்ட் எகானமி விமான நிறுவனமாக மாறுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.