டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாம் ஒரு இந்து என்றும் தாம் கோவிலுக்குப் போவதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு சென்ற கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அயோத்திக்கு சென்றது குறித்த கேள்வி எழுந்தது. கோவில்களுக்கு செல்வது மிதமான இந்துத்துவா நிலைப்பாடா என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
ஏன் நீங்கள் கோவிலுக்குப் போவதில்லையா என்று திருப்பிக் கேட்ட கெஜ்ரிவால் தாம் இந்துவாக இருப்பதால் கோவில்களுக்குச் செல்வதாகக் கூறினார்.