பெல்ஜியம் நாட்டில் பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சாலைகளில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் புவி வெப்பமயமாதலை ஒன்றரை டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை வலியுறுத்தி தலைநகர் பிரஸ்ஸெல்சின் மையப் பகுதியில் உள்ள முக்கிய வீதியில் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை போலீசார் வலுக்கட்டயமாக அப்புறப்படுத்தினர்.