புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கைப்பையை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த 1 ஆம் தேதி நெய்வேலி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டு ஊர் திரும்ப பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், திடீரென ஒரு பெண்ணின் கைப்பையை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகாரும் ஏதும் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.