அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான மசோதாவை ஜோ பைடன் அரசு நிறைவேற்றியுள்ளது.
சாலை, பாலம், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கடந்த பத்தாண்டுகளில் இல்லா வகையில் 40 இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுவதற்கான மசோதாவை ஜோ பைடன் அரசு கொண்டுவந்தது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 228 பேர் ஆதரவாகவும், 206 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களில் 13 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஆளும் ஜனநாயகக் கட்சியில் 6 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். இந்த மசோதா அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.