தீபாவளியன்று புதுச்சேரியில் நிர்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 50 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவானது ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் இரண்டு மணிநேரம் பட்டாசுகளை வெடிக்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இதையடுத்து, விதிகளை மீறுவோரை கண்காணிக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் நேரக்கட்டுப்பாட்டை மதிக்கமால் பட்டாசு வெடித்து சிக்கிக்கொண்ட 50 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.