கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாடு நடைபெறும் இடத்தின் முன் திரண்ட சமூக ஆர்வலர்கள் கழிவு எண்ணெயைக் குடிப்பது போல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கார்பனை கட்டுப்படுத்தி உலக வெப்பமயமாதலை ஒன்று புள்ளி 5 டிகிரி செல்சியஸ்சிற்கு கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மற்றொரு பிரிவினர் நீர்நிலைகளில் கழிவு பொருட்கள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டு மீன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென கோஷம் எழுப்பினர். மேலும் மீனின் தலை போல் வேடமணிந்து கைகளில் ரத்தக் கரைகளுடன் மீன் செத்து மடிவது போன்று காட்சிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.