ஸ்பெயின் லா பால்மா கூம்பரே பியுகா எரிமலையில் இருந்து இருளையே பகலாக மாற்றும் அளவுக்கு வெளியேறும் தீக்குழம்பு டைம்லேப்ஸ் முறையில் படமாக்கப்பட்டது.
அரை சதமான 50 நாட்களை நெருங்கி எரிமலை தீக்குழம்பை வெளியேற்றி வருகிறது. இரவையே அந்தி மாலை போல் மாற்றி வர்ணஜாலத்தை எரிமலை காட்டி வருகிறது. சாம்பல் கழிவு வெளியேற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காற்று சுவாசிக்கும் வகையில் உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.