புதுச்சேரியில் 1 லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 94 காசுகளுக்கும், டீசல் 83 ரூபாய் 58 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுதிறது.
பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து புதுச்சேரியில் வாட் வரி 7 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசுகளும், டீசலுக்கான வாட் வரியையும் சேர்த்து 19 ரூபாயும் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.