தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியாவில் கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அதே போன்று வண்ண வண்ண விளக்குகளால் ஆன லேசர் ஷோவும் நடத்தப்பட்டது.
அயோத்தியாவில் உள்ள சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கில் தீப விளக்குகள் ஏற்றப்பட்டதால் அந்த பகுதியே தீப அலங்காரத்தால் ஜொலித்தது.
தீபாவளியை ஒட்டி குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள புகழ்பெற்ற அக்ஷார்தாம் கோவிலில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற பங்களா சாஹிப் குருத்துவாரா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வசீகரமாக காட்சி அளித்தது.