சீனாவை எச்சரிக்கும் விதமாக கிழக்கு லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினர் போர் ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர். சுமார் 200 பாராசூட் வீரர்கள் தரையிறங்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் படையுடன் குறிவைத்த எதிரியின் இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் போர் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நிறைவடைகிறது. 13 சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் லடாக்கின் சில மலைப் பகுதிகளில் தனது படையினரைத் திரும்பப் பெறாமல் சீன ராணுவம் பிடிவாதம் காட்டி வருகிறது.