இந்தியாவில் ஜூலையில் இருந்து மொத்தம் 93 லட்சம் பயனர்களின் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்ஆப் நிறுவனம், கடந்த செப்டம்பரில் மட்டும் 22 லட்சம் கணக்குகளை முடக்கியதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அந்நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், கணக்குகளை முடக்கவும், பாதுகாப்பு தொடர்பாகவும் செப்டம்பரில் 560 பயனர்கள் புகாரளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'ரிபோர்ட்' வசதியை பயன்படுத்தி பயனர்கள் அளித்த எதிர்மறை கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிகளின் படி, 50 லட்சத்திற்கும் மேல் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள் மாதந்தோறும் புகார்கள் பெற்றது தொடர்பாகவும், அதில் எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.