பருவநிலை மாற்றம் காரணமாக 2030ம் ஆண்டுக்குள் மக்காச்சோள விளைச்சலை கடுமையாகப் பாதிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து Nature Food இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், சோளத்தின் உற்பத்தி 24 விழுக்காடு வரை குறையும் என்றும், கோதுமையின் உற்பத்தி 17 விழுக்காடு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்கா, கனடா, வட சீனாவின் சமவெளிகள், மத்திய ஆசியா மற்றும் பிற பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் வெப்பமயமாதலுக்கு ஏற்ப வளரும் கோதுமை விளைச்சல் அதிகரிப்பினால் இந்த சமநிலையற்ற தன்மை ஏற்படும் என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது