கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அச்சுதானந்தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
98 வயதான அச்சுதானந்தனுக்கு கடுமையான இரைப்பை குடல் அழற்சி மற்றும் மாற்றப்பட்ட சிறுநீரக செயல்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீ உத்ராடம் திருநாள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.