இந்திய, சவுதி அரசுகளால் வகுக்கப்படும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஹஜ் பயணிகள் தேர்வு நடைபெறும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
மும்பையில் பேசிய அவர், இரண்டு டோஸ் தடுப்பூசிகள் மற்றும் ஹஜ் செல்லும் போது பின்பற்றப்பட வேண்டிய கொரோனா விதிமுறைகளை வகுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.