இங்கிலாந்தின் Salisbury நகரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
Salisbury ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக சென்ற ரயில் தடம் புரண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து பற்றி தகவல் அறிந்த தும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ரயிலில் சிக்கி இருந்த பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.