தைவான் எல்லைப் பிரச்சினையில் தற்போதுள்ள நடைமுறையே நீடிக்க வேண்டும் என்றும் அதனை மாற்ற முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவானுக்கு ராணுவ ரீதியாகவும் சீனா அழுத்தம் தருவதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்சினை குறித்து ரோம் நகரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கெனும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீயும் சந்தித்துப் பேசிய போது இருதரப்பிலும் மோதல் வலுத்தது. தைவானில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் கடும் பதிலடித் தரப்படும் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.