ஏமன் தற்காலிக தலைநகர் ஏடன் விமான நிலையத்தின் அருகில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான நிலையத்தின் அருகில் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றி வந்த கனரக வாகனம் வெடித்து சிதறியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகளின் கண்ணாடிக் கதவுகள் உள்ளிட்டவை சுக்கு நூறாக நொருங்கியதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மூன்று வாரங்களுக்கு முன் மாகாண ஆளுநரை கொல்ல நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில்,இந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.