சூடானில் ராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மெகா பேரணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் Abdalla Hamdokவின் அமைச்சரவை கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தியது முதல் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனநாயக முறையிலான ஆட்சியை வலியுறுத்தி திரண்ட மக்கள் சாலையில் நின்ற ராட்சத விளம்பர பலகையில் ஏறி சூடான் தேசிய கொடியை பறக்கவிட்டனர்.
போராட்டத்தை கலைக்க ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 38 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.