ஸ்பெயினின் லா பால்மா தீவில் 40 நாட்களுக்கு மேலாக குமுறி வரும் கும்ப்ரே வியஜா எரிமலையை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தஜுயா காட்சி முனை, தஜகோர்டெ துறைமுகம் ஆகிய இடங்களில் இருந்து தீப்பிழம்பை கக்கி வரும் எரிமலையை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கப்படுவதால் எரிமலையால் பாதிக்கப்பட்ட லா பால்மா தீவின் பொருளாதாரம் மீட்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்ப்ரே வியஜா எரிமலை இதுவரை 2 ஆயிரத்து 200 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் மற்றும் 2 ஆயிரம் கட்டடங்களை கபளீகரம் செய்துள்ளது.