ஃபேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய தாய் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்படுவதாக மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்படும் நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாக்ராம் ஆகிய செயலிகள் பெயர்களில் மாற்றம் இல்லை என மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார். இதுவரை ஃபேஸ்புக் என்ற பெயரிலேயே கிளை நிறுவனங்கள் செயல்பட்ட நிலையில், இப்போது ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மெட்டா என்ற தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Virtual Reality என்னும் புதுயுக தொழில்நுட்பத்தை நோக்கி அடுத்தகட்டமாக பல சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதால் மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்ட மெட்டா என்பதை நிறுவன பெயராக வைத்துள்ளார் மார்க் ஜுக்கர்பர்க். 1992 -ல் வெளியான Neal Stephenson எழுதிய Snow Crash என்னும் நாவலில் மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
அந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஆன்லைன் கேம் போன்ற டிஜிட்டல் உலகில் Virtual Reality தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.