பாதுகாப்புத் துறையில் பாலினச் சமத்துவத்தைப் பேணும் வகையில் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண் வீராங்கனைகளும் பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்படுவதாக ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
புனே தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்களைப் பணிக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நரவானே, ராணுவத்தில் பாலினச் சமத்துவத்தைப் பேணும் முதல் நடவடிக்கையாகத் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண் வீராங்கனைகளும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதைப் பெண்கள் மெய்ப்பிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.