சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் சாலையில் தந்தை கண் முன்னே மகன் பேருந்தில் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தனது தாயை அழைத்து வர இரு வேறு வாகனத்தில் தந்தை சுப்புராஜ், மகன் ஸ்ரீதர் சென்றுள்ளனர். சாலையில் சென்ற போது நிலை தடுமாறிய ஸ்ரீதர் பின்னால் வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.