வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரி விதிப்பதாக அறிவித்த பிரான்ஸ் அரசு தற்போது எல்லைத் தாண்டி வந்ததாக பிரிட்டன் இழுவைக் கப்பலை பிடித்து வைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியதில் இருந்து மற்ற ஒன்றிய நாடுகளுடனான வணிக மற்றும் பொது போக்குவரத்து, வெளிநாட்டு பணியாளர்களை பணி அமர்த்துவது, எல்லை பங்கீடு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக பிரிட்டன் இழுவைக் கப்பலை பிரான்ஸ் கடற்படை பிடித்துள்ளது. பிரான்சின் செயலுக்கு பிரிட்டன் அமைச்சகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.