வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம் மற்றும் 7 நெருப்புக்கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், பூங்காவில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 22 வயதான கவிதா என்ற பெண் சிங்கம், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த போதும், தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் உயிரிழந்துவிட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேப்போல், அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 35 நெருப்புக்கோழிகளில் திங்கட்கிழமை முதல் நேற்று வரை அடுத்தடுத்து 7 நெருப்புக்கோழிகள் உயிரிழந்ததால், கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நெருப்புக்கோழிகளின் எடை மற்றும் உடல் நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.