இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளார். தற்போது தேசிய கிரிக்கெட் பயிற்சி கழகத்தின் தலைவராக அவர் இருக்கிறார்.
தலைமை பயிற்சியாளராக அவர் வரவேண்டும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது ராகுல் டிராவிடம் பேச்சு நடத்தினர்.
அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் தற்போது நடக்கும் T-20 உலக கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் ராகுல் டிராவிட் பதவி ஏற்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.