தெற்கு இத்தாலியில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சிசிலி மாகாணத்தின் ஸ்கார்டியா , கடானியா, கலாபிரியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் நீரில் மிதக்கின்றன.
300 மில்லி மீட்டர் அளவில் கனமழை கொட்டியதாகவும், ஓராண்டுக்கு தேவையான கனமழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டாற்று வெள்ளத்தில் கார்கள், வீட்டு உபயோக பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் மண் சரிவு ஏற்பட்டும், ரயில் தண்டவாளங்கள் பெயர்ந்ததாலும், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.