ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள கான்பூருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உயர்மட்ட நிபுணர் குழுவை அனுப்பி வைத்துள்ளது.
தொற்றியல் நிபுணர், பொது சுகாதார மருத்துவர்கள் மற்றும் மகளிர் நோய் நிபுணர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இவர்கள் உதவுவார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் முதன்முறையாக 57 வயதான விமானப்படை அதிகாரி ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த பல நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு ஜிகா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.