பாகிஸ்தானின் சாமன் எல்லை மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் எல்லையை கடந்து சென்றனர்.
தாலிபான் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆப்கானில் இருந்து அதிகளவிலான மக்கள் பாகிஸ்தானில் குடியேற முயற்சிப்பதால் கடந்த மூன்று வாரங்களாக சாமன் எல்லை மூடப்பட்டது. இரவில் திடீரென எல்லைப் பகுதி 3 மணி நேரத்திற்கு திறக்கப்பட்டதால் முண்டியடித்துக் கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் எல்லையை கடந்தனர்.