பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது கற்களை வீசிய ஆப்கானியர்கள் பாகிஸ்தான் எல்லையை உடனடியாகத் திறக்குமாறு வலியுறுத்தினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக வருவதால் முக்கிய எல்லைகளில் ஒன்றான சம்மன் (Chaman) எல்லையை பாகிஸ்தான் அரசு 3 வாரங்களாக மூடி உள்ளது.
தினமும் 1000 க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் கடக்கும் சம்மன் (Chaman) எல்லை மூடப்பட்டதை தொடர்ந்து எல்லை அருகே பல நாட்களாகக் காத்திருக்கும் ஆப்கானியர்கள் எல்லையைத் திறக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்தினரை நோக்கி கற்களை வீசினர்.
ராணுவத்தினர் பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை அப்புறப்படுத்தினர்.