பாலிவுட் நடிகை நோரா ஃபதேகிக்கு காரை பரிசளித்ததாக, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்து சென்றபோது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மோசடி மன்னன் சுகேஷ் பதிலளித்துள்ளான்.
தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் அடைப்பட்டுள்ள நிலையில், வழக்கு ஒன்றில் ஆஜர்ப்படுத்த அமலாக்கத்துறையினர் டெல்லி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது நடிகை நோராவிற்கு காரை பரிசளித்ததாகவும், அது தொடர்பான விவரங்களை 'நீங்கள் ஏன் நோராவிடம் கேட்கவில்லை?' என்றும் சுகாஷ் பதிலளித்தான். சுகேஷ் பரிசளித்த விவகாரம் தொடர்பாக, கடந்த 14ஆம் தேதி நோராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.