பண்டிகைக் காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, கொல்கத்தா மருத்துவமனையின் இயக்குனர் சுப்ரஜோதி பவ்மிக், பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை எடுத்து கொண்டால் பாதிப்பு வராது என அர்த்தமல்ல என்று குறிப்பிட்டார்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், பாதிப்பு விகிதம் அதிரித்து இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறினார். தற்போது பண்டிகைக் காலம் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சுப்ரஜோதி வலியுறுத்தினார்.