சீனாவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப் பாடங்களைக் குறைக்கும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி, பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது அதிகப்படியான கல்விச்சுமையை சுமத்துவதை சட்டம் தடை செய்கிறது. மேலும், குழந்தைகள் இணையம், வீடியோ கேமுக்கு அடிமையாவதை தடுப்பதில் பெற்றோரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று புதிய சட்டம் கூறுகிறது.
பெற்றோர், குழந்தைகள் மீது மோசமான நடத்தையை வெளிப்படுத்தினால் அவர்களைத் தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை மேம்படுத்துதல், கல்வித் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.