பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி சேனல்கள் கண்ணியக் குறைவான காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒழுங்குமுறை ஆணையம் விடுத்துள்ள சுற்றறிக்கையில், அநாகரிகமான ஆடை அணிதல், படுக்கை காட்சிகள் மற்றும் சைகைகள், அரவணைத்தல் போன்ற காட்சிகள் இடம் பெறக் கூடாது என வலியுறுத்தி உள்ளது.
மேலும் கலாச்சாரத்தை அலட்சியம் செய்யும் விதமான காட்சிகளையும் தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடகங்களில் சில ஒழுக்கக் கேடான செயல்கள் அதிகம் காணப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.