ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகதிச் சிறுமியின் பொம்மை இங்கிலாந்து தலைநகர் லண்டன் வந்தடைந்தது.
அகதி சிறுமிகள் அடையும் துயரங்களை உலகுக்கு எடுத்துரைக்க தனியார் நிறுவனம் ஒன்று அமல் என்ற 9 வயது அகதி சிறுமியின் பொம்மையை வடிவமைத்தது.
4 பொம்மலாட்ட கலைஞர்களால் இயக்கப்படும் இந்த பதினொன்றரை அடி உயர பொம்மை ஜூலை மாதம் துருக்கியில் இருந்து தனது 8,000 கிலோமீட்டர் சுற்றுப்பயணத்தை தொடங்கியது.
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, வாடிகன் என பல்வேறு நாடுகள் வழியாக பயணித்த அமல் பொம்மை தற்போது லண்டன் வந்துள்ளது. பள்ளி மாணவர்கள் அதற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.