இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலைக்குத் தற்போது வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள் அதே சமயம் பெருந்தொற்று காலத்தை கடந்து விட்டதாகக் கருதி மக்கள் அலட்சியத்துடன் இருக்க கூடாது என எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில், 3 மாதங்களுக்கு முன் 40,000க்கும் மேல் இருந்த தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 15,000ஆக குறைந்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தபோதும், இறப்பு விகிதாச்சாரம் பன்மடங்கு குறைந்துள்ளது.
தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை இது உணர்த்துவதாக தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் புதிதாக உருமாறாததால் இரண்டாம் அலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல் மீண்டும் நேர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.