கொரோனா சூழலில் இந்தியரின் சராசரி வாழ்நாள் இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளது வல்லுநர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா சூழலில் உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களின் வாழ்நாளை அது எப்படிப் பாதித்துள்ளது என்பது குறித்து மக்கள் தொகைக் கல்விக்கான பன்னாட்டு மையத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டனர்.
2019ஆம் ஆண்டில் பிறந்தவர்களில் சராசரி வாழ்நாள் ஆண்களுக்கு 69 புள்ளி 5 ஆண்டுகள் என்றும், பெண்களுக்கு 72 ஆண்டுகள் என்றும் இருந்ததாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் பிறந்தவர்களில் சராசரி வாழ்நாள் ஆண்களுக்கு 67 புள்ளி 5 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 69 புள்ளி 8 ஆண்டுகளாகவும் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வழக்கமான ஆண்டுகளை விட 2020ஆம் ஆண்டில் கொரோனா சூழலில் 35 முதல் 79 வயது வரையான பிரிவினரில் அதிகம் பேர் உயிரிழந்ததே சராசரி வாழ்நாள் மிகவும் குறைந்ததற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.