ரயில்களில் விரைவில் மீண்டும் கேட்டரிங் சேவைகளை துவக்குவது பற்றி ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் ரயில்களில் பேன்ட்ரி வேன் சேவை, பயணிகளுக்கு படுக்கை விரிப்பு போர்வை வழங்குவது உள்ளிட்ட சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த சேவைகளை விரைவில் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க அடுத்த வாரம் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ரயில்வே மற்றும் irctc அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.