பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான விசாரணையை தாமதப்படுத்த குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு டிஜிபி தொடர்ந்து முயற்சி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீண்டும் நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வேண்டுமென்றே தனக்கு எதிரான விசாரணையை தாமதப்படுத்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், குற்றம்சாட்டினார்.
இதையடுத்து விசாகா கமிட்டி விசாரணையின் ஏற்கனவே உள்ள நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, தமிழக அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய 2 வார அனுமதியளித்து விசாரணையை தள்ளிவைத்தார்.