இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனியில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் துணை ஆணையர் அபித் ஹூசைன் சாதிக், உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் பனிச்சரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரு மாநிலங்களுக்கும் நடுவில் உள்ள லம்காகா கணவாயில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற 11 பேரைக் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாயமானவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் அபித் ஹூசைன் தெரிவித்தார்.