காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர் அருகில் உள்ள சனோபோரா அருகே சில தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் பாராமுல்லா ரபியாபாத் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டையும் ராணுவத்தினர் செயலிழக்கச் செய்தனர்.