ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிதாக இரு அணிகள் சேர்க்கப்பட உள்ள நிலையில், அதில் ஒரு அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து கிளப்பின் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் புதிதாக அணிகள் இணைய உள்ள நிலையில், அதை வாங்குவது குறித்த ஏல விண்ணப்பம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ரோனால்டோ போன்ற பிரபல வீரர்களை கொண்ட கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் உரிமையாளர்கள் அவ்ரம், ஜோயல் கிளேசர், புதிய அணியை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கான காலக்கெடுவை பிசிசிஐ நீட்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.