அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் நூற்றுக்கணக்கான அகதிகள் குவிந்து வருகின்றனர்.
தெற்கு மெக்சிகோவின் டாபாசுலாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் மெக்சிகோ அரசின் அகதிகள் ஆணையத்தில் தங்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பிக்க அகதிகள் காத்துக்கிடக்கின்றனர்.
கால் நடையாக நடந்து அமெரிக்க எல்லையை அடைய அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் அனைவரையும் டாபாசுலாவிலேயே வைக்க மெக்சிகோ அரசு முடிவுசெய்துள்ளது. அமெரிக்காவில் குடியேறும் நோக்கில் டாபாசுலாவில் மட்டும் சுமார் 90 ஆயிரம் அகதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.