இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே 2 நாள் பயணமாக ஜம்மு மண்டலத்துக்குப் பயணமானார்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுடனான பன்னாட்டு எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி ஆகியவற்றில் ராணுவத்தின் முன்னிலைப் பகுதிகளுக்கு நரவானே செல்லவிருப்பதாகவும், அங்குப் பாதுகாப்பு நிலவரம், ராணுவத்தின் தயார் நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள செயல்பாடுகள் குறித்துத் தளங்களில் உள்ள உயர் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்களைக் குறிவைத்துப் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில் அங்கு ராணுவத் தளபதி செல்வது குறிப்பிடத் தக்கது.