ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில், மக்கள் வாய் விட்டு அழுது மன அழுத்தத்தை போக்கி கொள்ள பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் ஆண்டுதோறும் 3,500 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மக்கள் கவலைகளை வெளியே கூறாமல் மனதுக்குள்ளேயே வைத்து குமுறுவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதையடுத்து மக்கள் வாய் விட்டு அழுவதற்கு வசதியாக தலைநகரின் மையப்பகுதியில் ஸ்பெயின் அரசு பிரத்யேக கட்டிடத்தை அமைத்துள்ளது. பொதுவெளியில் வாய் விட்டு அழுவது மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என நினைப்பவர்கள் இங்கு வந்து மனதார அழலாம். மேலும், அங்குள்ள தொலைபேசி மூலம் மனநல மருத்துவரை தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.